×

டீசல் விலை ஏற்றத்தால் மண் அள்ளும் இயந்திர வாடகை உயர்வு: கத்திபாரா ஜெனார்த்தனன் அறிவிப்பு

சென்னை: டீசல் விலை உயர்வால் மண் அள்ளும் இயந்திரங்களின் வாடகை 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நல சங்க தலைவர் கத்திப்பாரா ஜெனார்த்தனன் வெளியிட்ட அறிவிப்பு:
டீசல் விலை அதிகரிப்பு, இயந்திரங்களின் உதிரி பாகங்கள் விலை உயர்வால் மண் அள்ளும் இயந்திர வாகனங்களின் வாடகையை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் 20 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளோம்.அதன்படி, ஜேசிபி போன்ற இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ₹900ம், நாள் ஒன்றுக்கு ₹4000ம், மாத வாடகையாக ₹90,000ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொக்லைனுக்கு ஒரு மணி நேரத்துக்கு ₹1800, நாள் ஒன்றுக்கு  ₹6000, மாதத்துக்கு ₹1,80,000, மினி பொக்லைனுக்கு மணிக்கு ₹1400, நாள் ஒன்றுக்கு ₹5000, மாதத்துக்கு ₹1,50,000, 6 சக்கர டிப்பர் லாரிக்கு நாள் ஒன்றுக்கு ₹4500, மாதத்துக்கு ₹1,20,000, 10 சக்கர  டிப்பர் லாரிக்கு மணிக்கு ₹7000, மாதத்துக்கு ₹1,50,000ம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ரோடு போடக்கூடிய ரோலருக்கு நாள் ஒன்றுக்கு ₹5000, மாதத்துக்கு ₹1,00,000, மண் அள்ளும் கிரேடர்(பெரியது) மணிக்கு ₹12,500, மாதத்துக்கு ₹2,60,000, சிறிய ரக கிரேடருக்கு நாள் ஒன்றுக்கு ₹9000,  மாதத்துக்கு ₹1,80,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Diesel price hike ,announcement ,Kathirpa Janardhanan , Diesel price , Soil , hike
× RELATED திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல்...